TNPSC Thervupettagam

சர்வதேச கடன் அறிக்கை

December 18 , 2023 342 days 321 0
  • சர்வதேச கடன் அறிக்கை (IDR) என்பது உலக வங்கியினால் நீண்டகாலமாக வெளியிடப் படும் வருடாந்திர வெளியீடாகும்.
  • இது 122 நாடுகளுக்கான வெளிநாட்டுக் கடன் புள்ளிவிவரங்கள் மற்றும் பல்வேறு பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது.
  • கடன்-சேவை கொடுப்பனவுகள் - அசல் மற்றும் வட்டி உட்பட - 2022 ஆம் ஆண்டில் 5% உயர்ந்து 443.5 பில்லியன் டாலராக இருந்தது.
  • 75 ஏழ்மையான நாடுகளின் வெளி நாட்டுப் பொதுக் கடன் சேவைத் தொகைகள் 2022 ஆம் ஆண்டில் 88.9 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது என்பதோடு மேலும் 2023-2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இது 40% அதிகரிக்கவும் செய்யும்.
  • 2012 ஆம் ஆண்டில் இருந்து, அந்நாடுகளின் வட்டித் தொகை மட்டும் நான்கு மடங்கு அதிகரித்து 23.6 பில்லியன் டாலராக இருந்தது.
  • தனியார் துறை கடன் வழங்கு நிறுவனங்கள் கடனாக வழங்கியதை விட சுமார் 185 மில்லியன் டாலர்களை அசலாகத் திரும்பப் பெற்றுள்ளன.
  • ஒட்டுமொத்தமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இருந்து பத்திரதாரர்களுக்கு 127.1 பில்லியன் டாலர் நிகர நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • 2019-2021 ஆம் காலகட்டத்தில் சராசரி நிதி வரவு 202 பில்லியன் டாலர் ஆகும்.
  • உலக வங்கி மற்றும் பிற பலதரப்பு கடன் வழங்குநர்கள், 2022 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான புதிய நிதியுதவியில் 115 பில்லியன் டாலர்களை வழங்குவதன் மூலம் இடைவெளியை நிரப்ப உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்