சர்வதேச கணிதத் தினமானது பை (π) தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
பையின் மதிப்பைக் குறிக்கும் வகையில் (3.14) மாதம் மற்றும் தேதி (MM/DD) வடிவத்தில் இத்தினத்தின் தேதியானது எழுதப்பட்டுள்ளது.
நமது வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அதனை கௌரவிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள கணித ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களால் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கணிதத் தினத்தின் கருத்துரு, "அனைவருக்குமான கணிதம்" என்பதாகும்.
சர்வதேச கணிதத் தினமானது, 2019 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்டது.