TNPSC Thervupettagam

சர்வதேச கல்லீரல் அதிகொழுப்பு படிவு நோய் தினம் - ஜூன் 13

June 18 , 2024 159 days 144 0
  • இது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • கல்லீரல் அதிகொழுப்பு படிவு நோயானது வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது.
  • இந்த கோளாறு ஆனது தற்போது சரியான முறையில் மறுவகைப்படுத்தப்பட்டு, 'வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய, கொழுப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையிலான கல்லீரல் நோய்' (MASLD) என அழைக்கப்படுகிறது.
  • உலகளாவிய MASLD நோய்ப் பாதிப்பு 25-30% என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள இளம் பருவத்தினரிடையே கல்லீரல் கொழுப்பு படிவு நோய்ப் பாதிப்பு 38.6% ஆகவும், பருமனான குழந்தைகளிடையே இது 36% ஆகவும் இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Act Now, Screen Today' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்