TNPSC Thervupettagam

சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 03

September 8 , 2022 717 days 291 0
  • இந்தியாவில் மொத்தம் ஒன்பது வகையான கழுகுகள் காணப்படுகின்றன.
  • இவற்றுள் ஆறு இனங்கள் உள்நாட்டு வகை (வெண்முதுகுக் கழுகு, இந்தியக் கழுகு, மெலிந்த அலகுடையக் கழுகு, செந்தலைக் கழுகு, எலும்புண்ணிக் கழுகு மற்றும் எகிப்தியக் கழுகு) மற்றும் மூன்று இனங்கள் புலம்பெயர்ந்தவை (சாம்பல் நிறக் கழுகு, கிரிஃபோன் கழுகு மற்றும் இமயமலை கழுகு) ஆகும்.
  • இந்தியாவில் உள்ள ஒன்பது கழுகு இனங்களில் ஏழு இனங்கள் மகாராஷ்டிராவில் காணப் படுகின்றன.
  • கால்நடைகளின் வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் டைக்ளோஃபெனாக் என்ற கால்நடை மருந்தானது, கழுகுகள் அழிக்கப் படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
  • 2006 ஆம் ஆண்டு முதல் இந்த மருந்தானது இந்தியாவில் கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்குத் தடை செய்யப்பட்டது.
  • இந்தியாவில் கழுகுப் பாதுகாப்புக்கான செயல் திட்டம் 2020-2025 ஆனது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்