ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆனது 1971 ஆம் ஆண்டில் உலக வனவியல் தினத்தை நிறுவியது.
மக்களுக்கும் பூமிக்கும் காடுகள் ஆற்றும் பெரும்பங்கின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், பரப்பிடவும் வேண்டி இந்தத் தினமானது நிறுவப் பட்டது.
2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது 2011 முதல் 2020 வரையிலான ஆண்டுகளை காடுகளின் சர்வதேச தசாப்தமாக அறிவித்தது.
2012 ஆம் ஆண்டில், சர்வதேச காடுகள் தினமானது நிறுவப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'காடுகள் மற்றும் அவற்றின் நலம்' என்பதாகும்.