ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மே 15-ஆம் தேதி அன்று சர்வதேச குடும்பங்கள் தினம் (International Day of Families) கொண்டாடப்படுகின்றது.
சமுதாயத்தினுடைய அடிப்படை அலகான (Basic unit of society) குடும்பங்களினைப் பாதிக்கின்ற மக்கட் தொகைப் பெருக்கம் (demographic progression) சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களைப் பற்றிய அறிவினை மக்களிடையே அதிகரிப்பதற்கும், குடும்பங்களோடு தொடர்புடைய பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் சர்வதேச குடும்பங்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
2018- ஆம் ஆண்டிற்கான சர்வதேச குடும்பங்கள் தினத்தின் கருத்துரு- “குடும்பங்கள் மற்றும் உள்ளடங்கிய சமுதாயம்” (Families and inclusive societies).
1993-ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொது அவையினால் சர்வதேச குடும்பங்கள் தினம் பிரகடனம் செய்யப்பட்டது.