ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்பங்கள் தினம் (IDF - International Day of Families) அனுசரிக்கப்படுகின்றது.
1993 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையானது இத்தினத்தின் முதலாவது அனுசரிப்பை பறைசாற்றியது.
இத்தினம் 1996 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் சர்வதேச சமூகத்தை சமுதாயத்தின் அடிப்படை அலகுகளாக மாற்றுவது மற்றும் குடும்பப் பிணைப்புகளின் மதிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.
2019 ஆம் ஆண்டில் IDF-ன் கருத்துருவானது, “குடும்பங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை: SDG 13 மீதான கவனம்” என்பதாகும்.