TNPSC Thervupettagam

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

March 13 , 2020 1626 days 644 0
  • ஆப்கானிஸ்தானின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்கச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court- ICC) முடிவெடுத்துள்ளது.
  • அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையில் ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்" கையெழுத்திடப்பட்ட சில நாட்களில் இந்த அறிவிப்பானது வெளி வந்துள்ளது.
  • ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமானது இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு உச்சபட்ச அமைப்பாக (கடைசி கட்டமாக) விளங்குகின்றது.
  • சர்வதேசச் சமூகத்திற்காக மிகக் கடுமையான குற்றம் புரிந்த  குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப் படுவதற்காக நிறுவப்பட்ட முதலாவது நிரந்தர, ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவாகும்.
  • இதன் அடிப்படை ஒப்பந்தமான ரோம் ஒப்பந்தமானது 2002 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்