TNPSC Thervupettagam

சர்வதேச குழந்தைகள் அமைதிப்பரிசு

October 22 , 2017 2639 days 900 0
  • தமிழ்நாட்டை சேர்ந்த சக்தி எனும் 12 வயது சிறுவனின் பெயர் 2017 ஆம் ஆண்டின் சர்வதேச அமைதி பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • நரிக்குறவர் சமூகத்தினரின் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி , பலர் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப காரணமாக இருந்தமைக்காக சிறுவனின் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமையை மேம்படுத்துவதிலும் , குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் குறிப்பிட்ட பங்கினை ஆற்றிய குழந்தைகளுக்காக ஆண்டு தோறும் இப்பரிசு வழங்கப்படுகிறது.
  • ஆம்ஸ்டர்டாமில் உள்ள “கிட்ஸ் பவுண்டேசன்” எனும் சர்வதேச குழந்தைகள் உதவி அமைப்பு இந்த பரிசை வழங்குகிறது.
  • 2005-ல் ரோமில் நடைபெற்ற நோபல் அமைதிப்பரிசு பெற்றவர்களின் அமைதி மாநாட்டில் இந்த குழந்தைகள் அமைதிப்பரிசு முதன்முதலில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்