சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினம் - பிப்ரவரி 15
February 20 , 2023 648 days 225 0
இந்தத் தினமானது, சர்வதேசக் குழந்தைப் புற்றுநோய் அமைப்பு எனப்படும் பல பெற்றோர்களால் இணைந்து நிறுவப்பட்ட குழந்தைப் புற்றுநோய் சிகிச்சை ஆதரவு குழுக்களின் கூட்டமைப்பானது நிறுவப்பட்ட தினத்தினைக் குறிக்கிறது.
1994 ஆம் ஆண்டில் சர்வதேசக் குழந்தைப் பருவ புற்றுநோய் அமைப்பானது நிறுவப் பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளையோர்கள் மீதான கவன ஈர்ப்பினைப் பெறுவதும், அவர்களுக்கு ஆதரவை வழங்குவதுமே இந்த நாளின் நோக்கமாகும்.
சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினப் பிரச்சாரமானது மூன்று ஆண்டுகளுக்கு (2021-2023) மேற்கொள்ளப்படும்.
"சிறந்த உயிர்வாழ்வு" என்பதே இந்த மூன்று ஆண்டு கால முன்னெடுப்பிற்கான ஒரு முழக்கமாகும்.