TNPSC Thervupettagam

சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் தினம் - ஜூலை 07

July 9 , 2018 2272 days 1160 0
  • சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் தினம் (அ) கூட்டுறவு அமைப்புகளின் சர்வதேச தினம் ஜூலை 07 அன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.
  • சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் தினம் - 2018ன் கருத்துரு, “நிலையான நுகர்வு மற்றும் சரக்கு சேவைகளின் உற்பத்தி”
  • இத்தினத்தின் முழக்கம் : ஒத்துழைப்பின் மூலம் நிலையான சமூகத்தினைப் பெறுதல்.
  • கூட்டுறவு அமைப்புகளின் சர்வதேச தினமானது ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
  • ஜூலை 1923-ல் நடைபெற்ற சர்வதேச ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைப்புக் கூட்டணியினால் முதன்முறையாக சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் தினமானது கொண்டாடப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகளின் கூட்டுறவு அமைப்புகளின் சர்வதேச தினமாக 1995-ல் முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
  • இத்தினத்தின் குறிக்கோள்கள், கூட்டுறவு அமைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சர்வதேச ஒற்றுமை, பொருளாதார ஆற்றல், சமத்துவம் மற்றும் உலக அமைதியினை மேம்படுத்துதல் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்