பிரான்சின் ரிவியேராவில் நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவிற்கான நடுவர் குழுவின் தலைவராக ஆஸ்திரேலியாவின் நடிகையான கேத் பிளன்செட் (Cate Blanchett) நியமிக்கப்பட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு சேகர் கபூரின் “எலிசபெத்” திரைப்படத்தில் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியாக நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற இவர், மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார்.