தான் பிறந்தபோது இருந்த உலகத்தை விட தற்பொழுது மிகச்சிறந்த உலகத்தை அமைத்ததற்காக 3 இளம் வயதுடையவர்களுக்கு சர்வதேச கோல்கீப்பர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயதுடைய அமிகா ஜார்ஜ் என்ற இளம்பெண் “வறுமையின் காலம்” தொடர்பான பிரச்சாரத்திற்காக “பிரச்சார விருதை” வென்றுள்ளார்.
ஈராக் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய நடியா முரட் என்ற பெண் “மாற்றத்தை உருவாக்குபவருக்கான” விருதை வென்றுள்ளார். மேலும் நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
கென்யாவைச் சேர்ந்த 28 வயதுடைய டயஸ்முஸ் கிசிலு என்ற இளைஞர் “முன்னேற்றத்திற்கான” விருதை வென்றுள்ளார்.
ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மீதான சர்வதேச நடவடிக்கைகள் மற்றும் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்காணித்து உந்தப்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் பவுண்டேஷனால் 2017 ஆம் ஆண்டில் “கோல்கீப்பர்கள்” தொடங்கப்பட்டது.
கோல் கீப்பர்களுக்கான சர்வதேச கோல் விருதுகள் பொதுவாக “சமூக முன்னேற்றத்திற்கான ஆஸ்கார்” என்று அழைக்கப்படுகிறது.