TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

November 17 , 2017 2592 days 1454 0
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சர்வதேச சகிப்புத் தன்மை தினம் கொண்டாடப்படுகிறது.
  • மக்களிடையே சகிப்புத்தன்மை இன்மையால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், சமூகத்தில் சகிப்புத்தன்மை வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது.
  • 1945-ல் உருவாக்கப்பட்ட யுனெஸ்கோவினுடைய 50-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வண்ணம், 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1996-ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச உலக சகிப்புத் தன்மை தினம் நவம்பர் 16-இல் கொண்டாடப்படுகிறது.
  • 1995-ல் சகிப்புத் தன்மைக்கான ஐ.நா.வின் ஆண்டு (United Nations Year for Tolerance) மற்றும் மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாள் ஆண்டை குறிக்கும் விதமாக யுனெஸ்கோ அமைப்பானது அமைதி மற்றும் சகிப்புத் தன்மையின் மேம்பாட்டிற்கான விருதை தோற்றுவித்தது.
  • இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் 16-ல் சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தன்று அமைதி மற்றும் சகிப்புத்தன்மை மேம்பாட்டிற்கான யுனெஸ்கோ - மதன்ஜீத் சிங் பரிசு வழங்கப்படுகிறது.
  • அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்காக சிறந்த முறையில், குறிப்பாக மெச்சத்தகு வண்ணம் பங்களிப்பு வழங்கிய அமைப்புகள், நபர்கள், நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்