சர்வதேச சகிப்புத்தன்மை தினம் ஆனது, முதன் முதலில் 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது.
கலாச்சாரங்கள் மத்தியில் புரிந்துணர்வை ஊக்குவித்தல் மற்றும் பன்முகத் தன்மைக்கான மதிப்பினை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று, யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள் சகிப்புத் தன்மை குறித்த கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.