சர்வதேச சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசை-2017
October 27 , 2017 2633 days 907 0
சர்வதேச அளவில் அதிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக, ஆசிய நாடு ஒன்று வலிமையான கடவுச்சீட்டுத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.
இந்தியாவின் கடவுச்சீட்டு, இப்பட்டியலில் 75வது இடத்தில் உள்ளது. இதில் மொத்தம் 94 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு 3 இடங்கள் முன்னேறி இருக்கிறது இந்தியா.
இக்குறியீட்டுத் தரவரிசையானது, உலக அளவில் எல்லைகள் தாண்டிய பயன்பாட்டின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.
இந்தக் குறியீடு கனடாவின் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான ஆர்டன் கேபிடல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
தமது குடிமக்கள் 158 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் ஜெர்மனி இரண்டாம் இடத்தில் உள்ளது.