TNPSC Thervupettagam

சர்வதேச சதுப்புநிலச் சுற்றுச்சூழல் வளங்காப்பு தினம் – ஜூலை 26

July 27 , 2023 489 days 234 0
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினக் கொண்டாட்டமானது, நமது சுற்றுச்சூழலை நன்குப் பாதுகாப்பதில் சதுப்புநிலங்களின் முக்கியத்துவம் பற்றி ஒரு முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த வருடாந்திரக் கொண்டாட்டமானது, 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • அவை வளமான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழி வகுப்பதோடு, மீன் மற்றும் ஓட்டுடலி மீன்களுக்கான வளமிக்க வளர்ப்பு வாழ்விடத்தை வழங்குகின்றன.
  • புயல் மூலம் மேல் எழும்பும் கடல் அலைகள், சுனாமிகள், உயரும் கடல் மட்டம் மற்றும் கடல் அலை அரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக விளங்கும் இயற்கையான கடலோரப் பாதுகாப்பு அரணாகவும் சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன.
  • இவற்றின் மண் அதிக அளவு கார்பனை உறிஞ்சுவதால் மிகவும் திறன் மிக்க கார்பன் உறிஞ்சிகளாகவும் இவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்