TNPSC Thervupettagam

சர்வதேச சமய நிந்தனை உரிமைகள் தினம் - செப்டம்பர் 30

September 30 , 2023 424 days 143 0
  • இந்த நாள் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களுக்கு சமய நிந்தனைச் சட்டங்கள் பற்றிய தகவல்களை கற்பிப்பது மற்றும் கருத்து சுதந்திரத்தினைப் பாதுகாப்பது என்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எந்த ஒரு மதமும் அல்லது பிரிவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்ற நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • சமய நிந்தனை என்பது, கடவுளுக்கு அல்லது புனிதமானதாக நம்பப்படும் ஒன்றின் மீது காட்டப்படும் பெரும் அவமரியாதையைக் குறிக்கிறது.
  • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற பல நாடுகளில் சமயத்தினை வெளிப்படையாக விமர்சிப்பது குற்றச் செயலாக்கப் பட்டு உள்ளது.
  • சமய நிந்தனை உரிமைகள் தினமானது உலகமெங்கும் கொண்டாடும் விதமாக 2009 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்