இந்த நாள் ஆனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் கடும் ஊதிய வேறுபாட்டைப் போக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப் படி, உலகளவில் ஆண்களை விட பெண்கள் தோராயமாக 23% குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.
உலகளவில், சுமார் 2.7 பில்லியனுக்கும் அதிகமான பெண்கள், ஆண்களுக்கு நிகரான வேலைகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப் பட்டு உள்ளனர்.
சம ஊதிய சர்வதேசக் கூட்டணி (EPIC) என்ற அமைப்பானது ILO, UN பெண்கள் மற்றும் OECD ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.
எல்லா இடங்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான ஊதியத்தை வழங்கும் இலக்கினை அடைவதே இந்தக் கூட்டணியின் குறிக்கோள் ஆகும்.