TNPSC Thervupettagam

சர்வதேச சிறுதானிய ஆண்டு

August 17 , 2018 2297 days 2674 0
  • 2019 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கக் கோரி ஐ,நா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு (Food & Agricultural Organization) இந்தியா முன்மொழிந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • மேலும் இத்தாலியின் ரோம் நகரில் 2018 அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விவசாயக் குழுவின் (committee on Agriculture - COAG) 26வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இந்த முன்மொழிதலைச் சேர்க்க இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்த முன்மொழிதலை உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO – Food and Agriculture Organization) அதன் உறுப்பு நாடுகளோடு ஏற்றுக் கொள்வதன் மூலம் ஐ.நா பொதுச் சபை ஆனது 2019ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க வழிவகை செய்யும்.
  • இந்தியா 2018ம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக கொண்டாடுகிறது. சிறுதானிய ஆண்டாக அனுசரிப்பதன் மூலம் சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதலை ஊக்குவிக்க இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்