TNPSC Thervupettagam

சர்வதேச சிவப்பு பாண்டா தினம் - செப்டம்பர் 16

September 19 , 2023 435 days 224 0
  • இது ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிற நிலையில் இத்தினம் இந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நாள் ஆனது முதலில் சிவப்பு பாண்டா வலையமைப்பினால் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காணப்படும் இந்த அற்புத உயிரினத்தின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவு ஏற்பட்டுள்ளது பற்றிய எச்சரிக்கையை எழுப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சீனாவின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு இமயமலைப் பகுதியிலும் சிவப்பு பாண்டாக்கள் காணப்படுகின்றன.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின்படி, இந்தியாவில் மொத்தம் 5,000 முதல் 6,000 சிவப்பு பாண்டாக்கள் உள்ளன.
  • இந்தியாவில், அருகி வரும் சிவப்பு பாண்டாக்கள் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சரணாலயங்களில் அதிகம் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்