TNPSC Thervupettagam

சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினம் - டிசம்பர் 04

December 8 , 2022 625 days 235 0
  • 2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 ஆம் தேதியன்று சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • டாக்டர் லாவ்ரி மார்க்கர் என்பவர், ஓரிகானின் வின்ஸ்டனில் உள்ள வனவிலங்கு பூங்காவில் அது குட்டியாக இருந்தது முதல் தான் வளர்த்து வந்த கயாம் என்ற சிறுத்தையின் நினைவாக இந்த நாளை அறிவித்தார்.
  • கயாம் சிவிங்கிப் புலிகளுக்கு, மீண்டும் வனத்தில் விடுதலுக்கான முதல் ஆராய்ச்சி திட்டத்திற்காக பயிற்சியளிக்கப் பட்டதோடு, 1977 ஆம் ஆண்டில் அது நமீபியாவின் காட்டிற்குள் விடப்பட்டது.
  • சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினமானது வனவிலங்குப் பாதுகாப்பு தினத்துடன் ஒன்றி வருகிறது.
  • சிவிங்கிப் புலிகள் பூமியின் வேகமான விலங்கு எனப் பிரபலமாக அறியப் படுகிறது.
  • இது மூன்று வினாடிகளில் 70 மைல் வேகத்தை எட்டக் கூடியது.
  • தற்போது இந்த விலங்குகள் பெரும்பான்மையாக நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
  • 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசானது இந்த விலங்கினை அழிந்து போன ஒரு விலங்கு இனமாக அறிவித்தது.
  • இந்திய அரசாங்கம், நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் பாதுகாத்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்