TNPSC Thervupettagam

சர்வதேச சுங்க தினம் - ஜனவரி 26

January 29 , 2024 302 days 238 0
  • இந்த தேதியானது, உலக சுங்க அமைப்பு (WCO) நிறுவப்பட்டதை நினைவு கூருகிறது.
  • சுமூகமான எல்லை கடந்த வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் சுங்கத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
  • உலக சுங்க அமைப்பு ஆனது முன்னதாக 1952 ஆம் ஆண்டில் சுங்க கூட்டுறவு சபை என அறியப்பட்டது.
  • உலக சுங்க அமைப்பின் முதல் அமர்வானது, 17 உறுப்பினர் நாடுகளின் பங்கேற்புடன் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • தற்போது உலக வர்த்தகத்தில் சுமார் 98% பங்கினைக் கொண்டிருக்கும் 183 உறுப்பினர் நாடுகளை கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'சுங்கம் ஆனது பாரம்பரிய மற்றும் புதியப் பங்குதாரர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஈடுபடுத்துகிறது' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்