TNPSC Thervupettagam

சர்வதேச சுங்க தினம் - ஜனவரி 26

January 27 , 2020 1707 days 561 0
  • சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகள் குறித்த செயல்களின் மையமாக இருக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய சுங்கத்தின் பங்களிப்புகளுக்காக இந்த தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்நாளுக்கான கருப்பொருள் - “மக்கள், வளர்ச்சி மற்றும் கிரகத்திற்கான நிலைத் தன்மையை வளர்ப்பதற்கான சுங்கம்” என்பதாகும்.
  • இந்தத் தினமானது 1953 ஆம் ஆண்டில் சுங்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Customs Cooperation Council - CCC) தொடக்க அமர்வு பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நாளை நினைவு கூர்கின்றது.
  • 1994 ஆம் ஆண்டில் CCC ஆனது உலக சுங்க அமைப்பு (World Customs Organization - WCO) என மறுபெயரிடப் பட்டது. தற்போது 179 நாடுகளைச் சேர்ந்த சுங்க நிறுவனங்கள் WCO அமைப்பின்  உறுப்பினர்களாக உள்ளன.
  • சுங்க விஷயங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய நாடுகளுக்கிடையேயான ஒரே அமைப்பு என்று இந்த உலக சுங்க அமைப்பு அழைக்கப் படுகின்றது.
  • WCO ஆனது சர்வதேச ஒத்திசைவு அமைப்பு முறையிலானப் பொருட்களின் பெயரிடல் மற்றும் சுங்க மதிப்பீடு & அவற்றின் தோற்றம் தொடர்பான விதிகள் குறித்த உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒப்பந்தங்களின் தொழில்நுட்ப அம்சங்களையும் நிர்வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்