TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி

December 7 , 2017 2574 days 1012 0
  • இந்தியாவின் உலகளாவிய தொடக்கமான சர்வதேச ஆற்றல் கூட்டணி [International Solar Alliance-ISA] ஆனது உடன்படிக்கை அடிப்படையிலான நாடுகளுக்கிடையேயான சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.
  • சர்வதேச சூரியஆற்றல் கூட்டணி ஆனது இந்தியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள முதல் உடன்படிக்கை அடிப்படையிலான நாடுகளுக்கிடையேயான சர்வதேச நிறுவனமாகும்.
  • இதுவரை ISA- ல் 46 நாடுகள் ISA -ன் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 19 நாடு பின்னேற்பளித்து உள்ளன.
ISA
  • 2015 நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற COP21 பருவநிலை மாநாட்டில் பிரெஞ்ச் அதிபருடன் இணைந்து இந்தியாவால் இக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி ஆனது 121 நாடுகளின் கூட்டணி ஆகும். பெரும்பான்மையான இந்நாடுகள் சூரிய ஆற்றல் வளம் நிறைந்தவை. இவை கடக ரேகை மற்றும் அட்சரேகை ஆகியவற்றினுக்கிடையே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்தவை.
  • புதை படிமங்கள் அடிப்படையிலான எரிபொருள்கள் மீதான சார்பை குறைத்து, திறன்மிகு வகையில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கு கூட்டிணைந்து செயல்படுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • இடைக்கால செயலகத்தோடு இணைந்து இதன் தலைமையகம் இந்தியாவின் குர்கானில் உள்ளது.
  • குறைந்தபட்சம் 15 நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டால் தான் இது செயல்முறைக்கு வரும்.
  • மேலும், இக்கூட்டணியில் 2030-ல் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதி அளிக்க 1 டிரில்லியன் நிதியை திரட்டவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ISA ஆனது அவை,   கவுன்சில் மற்றும் செயலகம் என  மூன்று  நிறுவனக் கட்டமைப்பை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்