இந்தியாவின் உலகளாவிய தொடக்கமான சர்வதேச ஆற்றல் கூட்டணி [International Solar Alliance-ISA] ஆனது உடன்படிக்கை அடிப்படையிலான நாடுகளுக்கிடையேயான சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.
சர்வதேச சூரியஆற்றல் கூட்டணி ஆனது இந்தியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள முதல் உடன்படிக்கை அடிப்படையிலான நாடுகளுக்கிடையேயான சர்வதேச நிறுவனமாகும்.
இதுவரை ISA- ல் 46 நாடுகள் ISA -ன் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 19 நாடு பின்னேற்பளித்து உள்ளன.
ISA
2015 நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற COP21 பருவநிலை மாநாட்டில் பிரெஞ்ச் அதிபருடன் இணைந்து இந்தியாவால் இக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி ஆனது 121 நாடுகளின் கூட்டணி ஆகும். பெரும்பான்மையான இந்நாடுகள் சூரிய ஆற்றல் வளம் நிறைந்தவை. இவை கடக ரேகை மற்றும் அட்சரேகை ஆகியவற்றினுக்கிடையே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்தவை.
புதை படிமங்கள் அடிப்படையிலான எரிபொருள்கள் மீதான சார்பை குறைத்து, திறன்மிகு வகையில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கு கூட்டிணைந்து செயல்படுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இடைக்கால செயலகத்தோடு இணைந்து இதன் தலைமையகம் இந்தியாவின் குர்கானில் உள்ளது.
குறைந்தபட்சம் 15 நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டால் தான் இது செயல்முறைக்கு வரும்.
மேலும், இக்கூட்டணியில் 2030-ல் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதி அளிக்க 1 டிரில்லியன் நிதியை திரட்டவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ISA ஆனது அவை, கவுன்சில் மற்றும் செயலகம் என மூன்று நிறுவனக் கட்டமைப்பை கொண்டுள்ளது.