TNPSC Thervupettagam

சர்வதேச செயற்கை நுண்ணறிவு உடன்படிக்கையின் சட்டப்பூர்வ பிணைப்பு

September 11 , 2024 22 days 62 0
  • அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முதன்முதலான சட்டப்பூர்வ பிணைப்பு சார்ந்த சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது செயற்கை நுண்ணறிவு, மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தினை நிலைப்படுத்துதல் பற்றிய ஐரோப்பிய சபை கட்டமைப்பு ஒப்பந்தம் என அழைக்கப் படுகிறது.
  • இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதோடு புதுமைகளைச் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்தச் செயற்கை நுண்ணறிவு உடன்படிக்கையானது, 57 நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நடந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்