சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் - ஏப்ரல் 26
April 26 , 2024 213 days 221 0
1986 ஆம் ஆண்டில் இதே நாளில் நிகழ்ந்த கொடிய அணுசக்தி பேரிடரின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் 71/125 மூலமாக இந்த நாள் நியமிக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியன்று, சோவியத் ஒன்றியத்தில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்த அணு உலை வெடித்தது.
பல்வேறு அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் அடிப்படையில், பெலாரஸ், ரஷ்யா மற்றும் உக்ரைனில் சுமார் 8,400,000 பேர் அணுக்கதிர்வீச்சின் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
மூன்று நாடுகளிலும் சுமார் 155,000 ச.கி.மீ பரப்பளவிலான பிரதேசங்கள் அணுக் கதிர் வீச்சினால் மாசுபட்டன.
சுமார் 52,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட வேளாண் பகுதிகள் சீசியம்-137 மற்றும் ஸ்ட்ரோண்டியம்-90 ஆகியவற்றினால் மாசுபட்டுள்ளன என்ற நிலையில் இவற்றின் அரை வாழ்நாள் காலம் முறையே 30 ஆண்டுகள் மற்றும் 28 ஆண்டுகள் ஆகும்.