சர்வதேச செவிலியர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
“விளக்குடன் கூடிய பெண்மணி” என்றறியப்படும் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரின் பிறந்தநாளின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இவ்வருட சர்வதேச செவிலியர் தினத்தின் கருத்துருவானது, “செவிலியர்கள் – வழிநடத்துவதற்கான குரல் – அனைவருக்கும் நலன்” என்பதாகும்.
1935 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் நல்வாழ்வு துறை அதிகாரியால் முன்மொழியப்பட்ட இத்தினமானது சர்வதேச செவிலியர் குழுவால் 1965 ஆம் ஆண்டில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு ஜனவரியில் மே 02 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிப்பதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.