TNPSC Thervupettagam

சர்வதேச செஸ் (சதுரங்க) தினம் – ஜூலை 20

July 21 , 2019 1956 days 1062 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச செஸ் (சதுரங்கம்) தினம் அனுசரிக்கப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு இத்தினத்தில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE - International Chess Federation) உருவாக்கப்பட்டது.
  • FIDE தொடங்கப்பட்டதைக் கௌரவிப்பதற்காக 1966 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முதல் சர்வதேச செஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • ஜூலை 20 ஆம் தேதியை சர்வதேச செஸ் தினமாக அனுசரிப்பதற்கான பரிந்துரையானது யுனெஸ்கோவினால் வழங்கப்பட்டது.
  • 1851 ஆம் ஆண்டில் இலண்டனில் முதலாவது நவீன செஸ் தொடர் நடைபெற்றது.
  • இத்தொடரில் ஜெர்மனைச் சேர்ந்த அடோல்ப் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.
  • 1951 ஆம் ஆண்டில் ஆலன் தூரிங் என்பவர் செஸ் விளையாடுவதற்காக முதலாவது கணினி நிரலை மேம்படுத்தினார்.
  • இந்தியாவில் செஸ் விளையாட்டு 5-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அந்தக் காலகட்டத்தில் இது “சதுரங்கா” எனப் பெயரிடப்பட்டது.
  • இதன்பின் இந்த விளையாட்டு பாரசீகத்திற்குப் பரவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்