TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் - செப்டம்பர் 23

September 24 , 2023 333 days 180 0
  • உலக காது கேளாதோர் கூட்டமைப்பு (WFD) ஆனது உலகெங்கிலும் உள்ள 70 மில்லியன் காது கேளாதோர் சார்பாக இந்த தினத்திற்கான கருத்தாக்கத்தினை முன்மொழிந்தது.
  • 1951 ஆம் ஆண்டில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் விதமாக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டில், சர்வதேச காதுகேளாதோர் வாரத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச சைகை மொழிகள் தினம் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன்முதலில் சர்வதேச காது கேளாதோர் வாரம் கடைபிடிக்கப் பட்டது.
  • உலகில் 70 மில்லியனுக்கும் அதிகமான காது கேளாதோர் உள்ளனர்.
  • அவர்களில் 80% க்கும் அதிகமானோர் வளர்ச்சியடையாத நாடுகளில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்