TNPSC Thervupettagam

சர்வதேச தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

February 23 , 2019 2102 days 554 0
  • 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மொழியியல் கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி வழக்கு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 1999 ஆம் ஆண்டில் இது குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுக் கருத்தரங்கில் யுனெஸ்கோவினால் கொண்டு வரப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டது.
  • பின்னர் 2002 ஆம் ஆண்டில் இத்தீர்மானமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் வரவேற்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் சர்வதேசத் தாய்மொழி தினத்திற்கான கருத்துருவானது, “வளர்ச்சி, அமைதி மற்றும் சமரசம் ஆகியவற்றில் உள்ளூர் மொழிகளின் பங்கு” என்பதாகும்.
  • இந்த ஆண்டு, இந்தியா மற்றும் வங்க தேசம் ஆகிய இருநாடுகளும் இணைந்து வங்க தேசத்தில் உள்ள பெனபோல் நகரில் சர்வதேச தாய்மொழி தினத்தைக் கெண்டாடவிருக்கின்றன.
  • சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவதேன்பது வங்கதேசத்தின் முன்னெடுப்பாகும்.
  • வங்க மொழியின் அங்கீகாரத்திற்காக வங்கதேசத்தில் அந்நாட்டு மக்கள் போராடியதற்கான நினைவு தினமே பிப்ரவரி 21 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்