மொழியியல் (Linguistic), பன்மொழித்துவம் (multilingualism) மற்றும் கலாச்சார பன்முகத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி (Mother Language) தினம் கொண்டாடப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக தாய்மொழி தினத்தின் கருத்துரு = “மொழியியல் பன்முகத்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சியில் பன்மொழித்துவத்தை கணக்கில் கொள்ளுதல்” (Linguistic Diversity and Multilingualism Count for Sustainable development).
மொழியியல், பன்மொழித்துவம், கலாச்சார பன்முகத்துவத்தை ஊக்குவிப்பதற்காக 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் இத்தினம் முதன் முதலாக பிரகடனப்படுத்தப்பட்டது.