TNPSC Thervupettagam

சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் - மே 12

May 16 , 2022 833 days 344 0
  • தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது பசியை ஒழிக்கவும், வறுமையைக் குறைக்கச் செய்யவும், பல்லுயிர்த்தன்மை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கச் செய்யவும், பொருளாதார மேம்பாட்டினை அதிகரிக்கவும் எவ்வாறு உதவும் என்பது குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, (UNGA) 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தினத்தினை அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • 2020 ஆம் ஆண்டானது, ஐக்கிய நாடுகள் சபையினால், சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டாக (IYPH) அறிவிக்கப்பட்டது.
  • இருப்பினும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள செயல்பாடுகளை முடிப்பதற்காக சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டானது 2021 ஆம் ஆண்டு ஜூலை 01 வரை நீட்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்