TNPSC Thervupettagam

சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான புதிய கட்டமைப்பு

December 14 , 2018 2078 days 590 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டோரஸ் “ஐ.நா. சர்வதேச தீவிரவாதத்திற்கெதிரான ஒருங்கிணைப்பு உடன்படிக்கை” என்ற பெயர் கொண்ட புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார்.
  • இந்தப் புதிய கட்டமைப்பின் நோக்கங்கள் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய பணிகளை மேற்கொள்வதை ஒருங்கிணைப்பது ஆகியனவாகும்.
  • இது ஐ.நா. பொதுச் செயலாளர், 36 நிறுவனங்கள், பன்னாட்டுக் காவல் படை மற்றும் உலக சுங்க அமைப்பு (World Customs Organisation) ஆகியவற்றிற்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இந்தக் கட்டமைப்பிற்கு ஐ.நா. தீவிரவாத எதிர்ப்பு அலுவலகமானது ஒருங்கிணைப்புக் குழுவாக செயல்படும். மேலும் இக்கட்டமைப்பின் பணிகளை இக்குழு மேற்பார்வையிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்