இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம் கொண்டாடப் படுகிறது.
அனைவருக்கும் பயனளிக்கும் தூய்மையான எரிசக்திக்கான நியாயமான மற்றும் உள்ளார்ந்த மாற்றத்திற்கான விழிப்புணர்வை பரப்பச் செய்வதையும், அதற்கான நடவடிக்கையை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தூய்மையான ஆற்றல் நுட்பத்தினை ஏற்பது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாகும்.
உலகளாவிய தூய்மையான ஆற்றல் திரட்சி திறன் ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் 4,500 GW என்ற அளவினை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் இன்று உலகளாவிய தூய்மையான எரிசக்தித் திறனில் சுமார் 90% பங்கினைக் கொண்டுள்ளன.