TNPSC Thervupettagam

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகள்

February 12 , 2018 2351 days 827 0
  • “அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணி“ தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labor Organization - ILO) பரிந்துரைகள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய திட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • ஜெனீவாவில் 2015 ஜீன் மாதம் நடைபெற்ற 106வது சர்வதேச தொழிலாளர் மாநாடு ஏற்றுக்கொண்ட பரிந்துரை ஒப்புதலுக்கு இந்தியா ஆதரவளித்தது.
  • இந்தப் பரிந்துரை ஒப்புதலுக்கு ஆதரவளிப்பதும், இதனை பாராளுமன்றத்தின் தகவலுக்காக சமர்ப்பிப்பதும் அந்நாடுகளின் மீது எவ்வித உடனடி கட்டாயத்தையும் ஏற்படுத்தாது.
  • சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பரிந்துரைகளானது தேசியக் கொள்கை முறைக்கு வழிகாட்டும் வண்ணம் செயல்படும் ஒரு கட்டாயமில்லாத கருவியாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

  • உலக நாடுகள் குழுவின் ஒரு நிறுவனமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labor Organization - ILO) 1919ல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது.
  • இந்தியா சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அடித்தள (நிறுவன) உறுப்பினர் ஆகும். தற்சமயம் இது 187 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு சர்வதேச தொழிலாளர் தரவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பிற்கான வாய்ப்புகள் போன்ற தொழிலாளர் விஷயங்களோடு ஈடுபாடு கொண்டுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்