மே தினம் அல்லது தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படும் தொழிலாளர் தினமானது, மே 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
இது தொழிலாளர் வர்க்கத்தின் விலைமதிப்பற்றப் பங்களிப்புகளை அங்கீகரிக்கச் செய்து அவர்களைப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் தொழிலாளர் தினம் என்ற கருத்தாக்கமானது, 1886 ஆம் ஆண்டில் எட்டு மணி நேர வேலை நேரம் கோரி நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினை அடுத்து முன்வைக்கப் பட்டது.
இந்தியாவில், முதல் தொழிலாளர் தினமானது 1923 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று, மதராஸ் மாகாணத்தில் சிங்காரவேலர் என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் என்ற கட்சியால் கொண்டாடப்பட்டது.