TNPSC Thervupettagam

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்

February 11 , 2019 2113 days 720 0
  • இந்தியாவில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் (International Labour Organisation - ILO) நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நொய்டாவில் உள்ள V.V கிரி தேசிய தொழிலாளர் பயிற்சி நிறுவனத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரால் துவக்கி வைக்கப்பட்டது.
  • ஆரம்பகால உறுப்பினராக இந்தியா இந்நிறுவனத்தின் ஒவ்வொரு துறையிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றது.
  • கடந்த நூற்றாண்டில் அனைத்து எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் உள்பட 189 சர்வதேச தொழிலாளர் நிறுவன ஒப்பந்தங்களில் 47 ஒப்பந்தங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருக்கின்றது.
சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
  • அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் சமூகப் பாதுகாப்பையும் அளிக்கவும் சர்வதேச தொழிலாளர் தர நிர்ணயங்களை ஏற்படுத்தவும் இயங்கிடும் சர்வதேச தொழிலாளர் நிறுவனமானது ஒரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
  • இந்நிறுவனம் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளில் 193ல் 186 நாடுகளோடு குக் தீவுகளையும் சேர்த்து மொத்தம் 187 நாடுகளை தனது உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது.
  • அரசு, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளிகள் ஆகியோர் வெளிப்படையாக விவாதித்து தொழிலாளர் தரநிர்ணயங்களை உருவாக்கிடும் வகையில் இந்நிறுவனத்தின் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைப்பானது ஒரு புதுமையான அம்சமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்