உலக பொருளாதார மையத்தால் [WEF – World Economic Forum] வெளியிடப்படும் சர்வதேச தொழில்போட்டி குறியீட்டின் 2017-18 க்கான குறியீட்டு அறிக்கையில் (Global Competitiveness Index) 137 நாடுகளில் இந்தியா 40-வது இடத்தில் உள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தொழில்போட்டி குறியீட்டின் 39-ஆவது நிலையிலிருந்த இந்தியா தற்போது 40-வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
வணிக மற்றும் சமூக குறிகாட்டிகளை உள்ளடக்கிய “தொழில்போட்டிகளின் தூண்கள்” எனப்படும் 12 வகைப்பிரிவுகளின் அடிப்படையில் இந்த குறியீடு கணக்கிடப்படுகிறது.
உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தொடக்ககல்வி, தொழிலாளர் சந்தையின் திறன், நிதியியல் சந்தை வளர்ச்சி, தொழில்நுட்ப தயார் நிலை, சந்தை அளவு போன்றவற்றை உள்ளடக்கிய 12 தூண்கள் கணக்கிடப்படுகின்றன.