சர்வதேச தோல் வெளிர்தல் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
June 14 , 2024 163 days 180 0
தோல் வெளிர்தல் நோய் உள்ள நபர்களின் பல குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுப்பதோடு, அவர்களின் உரிமைகளை நன்கு மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தோல் வெளிர்தல் நோய் என்பது தோலில் நிறமி பற்றாக்குறையை ஏற்படுத்துகின்ற ஓர் அரிதான, மரபணு ரீதியாக மரபு வழியாகப் பெறப்பட்ட ஒரு நிலையாகும் என்ற நிலையில் இதன் விளைவாக வெளிர்ந்த முடி, தோல் மற்றும் கண்கள் போன்றவை இயல்பற்ற முறையில் காணப்படுகின்றன.
இது சூரியன் மற்றும் பிரகாசமான ஒளியினை காண முடியாத ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்பதோடு மேலும் தோல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பினையும் இது உருவாக்குகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "10 years of IAAD: A decade of collective progress" என்பதாகும்.