TNPSC Thervupettagam

சர்வதேச நடன தினம்

April 30 , 2019 1979 days 477 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று சர்வதேச நடன தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது உலகம் முழுவதும் நடனக் கலையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஜுன் – ஜார்ஜஸ் நோவிரி என்பவரின் பிறந்த தினத்தைக் குறிக்கின்றது.
  • இவர் நவீனக் கூட்டு நடனத்தை உருவாக்கியவராவார்.
  • இத்தினமானது சர்வதேச மேடை நிறுவனத்தின் (ITI - International Theatre Institute) நடனக் குழுவின் முன்னெடுப்பாகும்.
  • யுனெஸ்கோவின் நிகழ்த்துக் கலைகளுக்கான முக்கியப் பங்காளர் ITI நிறுவனம் ஆகும்.
  • 1982 ஆம் ஆண்டில் இத்தினத்தின் முதலாவது கொண்டாட்டமானது நிகழ்த்தப் பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் நடனத் தினத்தின் போது தலை சிறந்த நடனப் பயிற்சியாளர் அல்லது நடனக் கலைஞரின் தகவலானது உலகம் முழுவதும் பரப்பப் படுகின்றது.
  • அந்த நபர் அந்த ஆண்டின் தகவல் கலைஞராக தேர்ந்தெடுக்கப் படுகின்றார்.
  • இந்தியாவைச் சேர்ந்த ஒரே தகவல் கலைஞர் இந்திய நடனக் கலைஞரான சேத்னா ஜலன் ஆவார்.
  • 1986 ஆம் ஆண்டில் இவர் நடன தினத் தகவலை உலகம் முழுவதும் அனுப்பினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்