TNPSC Thervupettagam

சர்வதேச நண்பர்கள் தினம் - ஜூலை 30

August 3 , 2018 2305 days 615 0
  • யுனெஸ்கோவின் பரிந்துரைக்குப் பிறகு துவக்க முயற்சியாக நண்பர்களுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. யுனெஸ்கோவின் பரிந்துரையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1997-ல் ஏற்றுக் கொண்டது.
  • அமைதிக் கலாச்சாரம் என்பது விழுமியங்கள், உளப்பாங்கு மற்றும் ஒழுக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படைக் காரணங்களான வன்முறையை நிராகரிப்பது மற்றும் மோதல்களைத் தடுக்க முயல்வது ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
  • சர்வதேச நண்பர்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2011-ல் வலியுறுத்தியது. மக்கள், நாடுகள், கலாச்சாரங்கள், மற்றும் தனிநபர்களுக்கிடையேயான நண்பர் என்ற உறவின் மூலம் அமைதிக்கான முயற்சிகள் மற்றும் பிரிவுகளுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்று இத்தினத்தை அனுசரிப்பதன் மூலம் ஊக்கமளிக்கப்படுகிறது.
  • இத்தினமானது அமைதியின் கலாச்சாரத்தின் மீதான திட்டத்தின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களின் இலக்குகள் மற்றும் நோக்கங்களுக்கு ஆதரவளிக்கிறது. மேலும் அமைதியின் கலாச்சாரம் மற்றும் உலகில் உள்ள குழந்தைகளுக்கான அகிம்சையின் சர்வதேச தசாப்தத்திற்கு (2001-2010) இத்தினம் ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்