இது ஈரானியப் புது வருடப் பிறப்புத் திருவிழாவாகும். இது பாரசீகப் புது வருடம் என்றும் அறியப் படுகின்றது.
நவ்ருஸ் தினமானது வட அரைதுருவக் கோளத்தில் வசந்த காலத்தின் முதல் தினத்தைக் குறிக்கின்றது. இது வழக்கமாக மார்ச் 21ஆம் தேதியன்று நிகழும் வசந்தகால சம இரவு-பகல் தினத்தன்று அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது 2010 ஆம் ஆண்டில் ஒரு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஐக்கிய நாடுகளால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.