TNPSC Thervupettagam

சர்வதேச நிலவு தினம் – ஜூலை 20

July 22 , 2023 398 days 181 0
  • அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக மனிதர்கள் முதன்முதலில் நிலவில் இறங்கிய நாளின் ஆண்டு நிறைவை இந்த நாள் குறிக்கிறது.
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியன்று நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய விண்வெளி வீரர்கள் நிலவில் இறங்கிய ஒரு இடத்திற்கு டிரான்குயிலிட்டி பேஷ் (அமைதித் தளம்) என்று பெயரிட்டனர்.
  • அப்பல்லோ 11 ஆய்வுப் பயணமானது மனிதர்களை நிலவில் தரையிறக்கிய நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணமாகும்.
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட ஏவூர்தியானது நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் “பஸ்” ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்றது.
  • சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்