TNPSC Thervupettagam

சர்வதேச நிலையங்கள் கழகத்தின் உலக விமானப் போக்குவரத்து அறிக்கை

September 25 , 2018 2258 days 649 0
  • சர்வதேச விமான நிலையங்கள் கழகத்தின் உலக விமானப் போக்குவரத்து அறிக்கையின்படி டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையமானது உலகின் 16-வது பரபரப்பான விமான நிலையமாக இடம் பிடித்துள்ளது.
  • இந்த விமான நிலையமானது 2017-ல் 6.34 கோடி பயணிகளை கையாண்டுள்ளது.
  • இது 2016 ஆம் ஆண்டில் 22வது இடத்தில் இருந்தது மற்றும் 2017-ல் 14% அதிக பயணிகளை கையாண்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் அட்லாண்டா ஹார்ட்ஸ்ஃபீல்ட் - ஜாக்சன் விமான நிலையம் 10.39 கோடி பயணிகளை கையாண்டு உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தின் இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 9.38 கோடி பயணிகளுடன் பீஜிங் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • துபாய் சர்வதேச விமான நிலையமானது 8.82 கோடி பயணிகளைக் கையாண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்