TNPSC Thervupettagam

சர்வதேச நீதி தினம் – ஜூலை 17

July 20 , 2019 1898 days 1091 0
  • சர்வதேச நீதிக்கான உலக தினம் என்பது ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச தினமாகும். இது சர்வதேசக் குற்றவியல் நீதி தினம் அல்லது சர்வதேச நீதி தினம் என்று அழைக்கப்படுகின்றது.
  • இத்தினம் சர்வதேசக் குற்றவியல் நீதியை ஊக்குவிப்பதையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC - International Criminal Court) பணியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு ஜுன் 01 அன்று கம்பாலாவில் (உகாண்டா) நடைபெற்ற ரோம் ஒப்பந்தத்தின் மறு ஆய்வுக் கருத்தரங்கில் உறுப்பு நாடுகளின் சபையானது ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேசக் குற்றவியல் நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்