கடற்கரைகளுக்கான நீலக் கொடி திட்டமானது சர்வதேச அளவில் அரசு சாரா மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (Foundation for Environmental Education - FEE) என்ற அமைப்பால் இயக்கப்படுகிறது.
இது இந்தியாவில் கப்பட் (கேரளா), சிவராஜ்பூர் (குஜராத்), கோக்லா (டையு), காசர்கோட் மற்றும் பாதுபித்ரி (கர்நாடகா), ருஷிகொண்டா (ஆந்திரப் பிரதேசம்), கோல்டன் (ஒடிசா) மற்றும் ராதாநகர் (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) ஆகிய இடங்களில் ஏற்றப் பட்டது.
இந்த 8 கடற்கரைகளுக்காக வேண்டி சர்வதேச நீலக் கொடிச் சான்றிதழை இந்தியா பெற்றுள்ளது.
FEE என்ற அமைப்பு பிரான்சில் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது போன்று 560க்கும் மேற்பட்ட கடற்கரைகளைக் கொண்ட பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது.