ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் படும் நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
நெகிழிப் பையில்லா உலகப் பிரச்சாரத்தின் போது இந்த முயற்சி தொடங்கப் பட்டது.
2008 ஆம் ஆண்டில் ஐரோப்பா, இந்த நாளில் சுழியக் கழிவு என்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியது.
நெகிழிப் பைகள் மீதான நம்பிக்கையைக் குறைப்பதற்கும், பல்வேறு நிலையான மாற்று வழிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு வேண்டி ஒரு கூட்டு விழிப்புணர்வுநிலையினை உருவாக்க இந்த நாள் பரிந்துரைக்கிறது.