TNPSC Thervupettagam

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் - ஜூலை 18

July 22 , 2024 125 days 203 0
  • அவரது பிறந்த நாளில், இந்த நாள் நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்க்கை மற்றும் மரபினைக் கொண்டாடுகிறது.
  • 1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதியன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதல் அதிபர் என்ற பெருமையினை மண்டேலா அவர்கள் பெற்றார்.
  • தென்னாப்பிரிக்காவில் அவர் 'தேசத் தந்தை' என்று குறிப்பிடப்படுகிறார்.
  • மண்டேலா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும், சுதந்திரம் மற்றும் நீதிக்காகப் போராடியதால், அவர் தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை சிறையில் கழிக்க நேர்ந்தது.
  • அவரது பங்களிப்புகளுக்காக வேண்டி 1993 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Combating poverty and inequality is in our hands’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்